Poolambadi Thiroupati Amman Temple Annual Abhishekam and Urani, Pongal Festival: Conclusion in the presence of International businessman DATO S PRAKADEESH KUMAR!
பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவிலின் கடந்த ஆண்டு, மஹா கும்பாபிஷேகம் நடைப்பெற்று ஓர் ஆண்டு நிறைவடைந்த நிலையில், வருடாபிஷேக விழா மற்றும் ஊரணி பொங்கல் திருவிழா குறித்து ஆலோசனைக் கூட்டம் திரவுபதி அம்மன் அறக்கட்டளையின் தலைவர் சூரியபிரகாசம் தலைமையில் நடந்தது. இதில் பூலாம்பாடியை சேர்ந்தவரும், பன்னாட்டு தொழிலதிபருமான டத்தோ.எஸ்.பிரகதீஸ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இதில், திரவுபதி அம்மன் கோவில் வருடாபிஷேக விழா மற்றும் ஊரணி பொங்கல் திருவிழா வரும் ஜீலை 4-ந்தேதி சக்தி அழைத்தல், காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுன் விழா தொடங்குவதோடு, அடுத்த நாள்முதல் 18-நாட்களுக்கு திரெளபதி அம்மன் வரலாற்றைக்கூறும் பாரதம் படித்தல் நிகழ்வும், அதனைத் தொடர்ந்து, ஜீலை 21-ந்தேதி வெள்ளிக் கிழமை பொங்கலாயி அம்மனுக்கு பொங்கல் வைக்கும் நிகழ்வும், 22-ந்தேதி மாலை கணபதி பூஜை, 23-ந்தேதி காலை திரெளபதி அம்மனுக்கு நன்னீராட்டு விழாவும், பொங்கல் மாவிலக்கு நிகழ்ச்சியும்,பகல் 12-மணிக்கு நாட்டுக்கல் பகுதியிலிருந்து அலகு குத்துதல், தீச்சட்டி எடுத்தல் நிகழ்ச்சியைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நிகழ்ச்சியும், இரவு கலை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து 24-ந்தேதி சுவாமியின் திருவிதீ உலா நடைப்பெற்று, நிறைவு நிகழ்ச்சியான 25-ந்தேதி மஞ்சள்நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவு பெற உள்ளது எனவும் முடிவு செய்யப்பட்டது.
இந்த ஆலோசனைக்கூட்டத்தில், அனைத்து சமூதாய மக்களும், அனைத்து விழாக் குழு பொறுப்பாளர்களும், டத்தோ. எஸ்.பிரகதீஸ்குமார் நற்பணி மன்றப் பொறுப்பாளர்களும், பொதுமக்கள் என பலர் திரளாக கலந்து கொண்டனர்.