Poultry Vaccination Vaccine on behalf of the Department of Animal Husbandry: Announced by District Collector

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் வே. சாந்தா விடுத்துள்ள அறிவிப்பு:

பெரம்பலூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் ஆண்டுதோறும் பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசிப் பணி இருவார முகாம் ( Special fortnight camp for RDVK vaccination ) நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாண்டு 09.02.2020 முதல் 22.02.2020 வரை இருவாரங்கள் கோழிகளுக்கான கோழிக்கழிச்சல் நோய் தடுப்பு ஊசிப்பணி முகாம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருந்தகங்களுக்குட்பட்ட கிராமங்களில் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் 8 வாரம் மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து கோழிகளுக்கும் இந்த தடுப்பூசிப் பணி இலவசமாக மேற்கொள்ளப்படவுள்ளது, எனவே, அனைத்து கோழி வளர்ப்போர் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இம்முகாமில் கலந்துகொண்டு தங்கள் கோழிகளுக்கு தடுப்பூசி போட்டு பயன்பெறலாம், இவ்வாறு தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!