Pouring rain, Chidambaram Nataraja temple arutra temple car was circulated in the streets!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தேர் திருவிழா இன்று தொடங்கியது, சிதம்பரம் மற்றும் சுற்றுப் பகுதியில் பலத்த மழை பெய்து வந்தது. நடராஜர் பெருமானும் சிவகாமசுந்தரி அம்மனும் மூலஸ்தான சன்னதியில் இருந்து புறப்பட்டு அலங்கரிக்கப்பட்ட தேர்களில் வலம் வந்தனர், அப்போது பெய்த பலத்த மழை காரணமாக சிதம்பரத்தில் நான்கு வீதிகளிலும் எந்த இடத்திலும் நிற்காமல் தொடர்ந்து நிலையை அடைந்தது நான்கு வீதிகளில் நடைபெறும் கட்டளைதாரர்கள் மண்டகப்படி பூஜைகள் சிதம்பரம் நடராஜர் கோவில் உள் வளாகத்தில் உள்ள ஆயிரக்கால் மண்டபத்தில் நடைபெறும் பொது தீட்சதர்களால் அறிவித்துள்ளனர்.

14 ஆண்டுகளுக்கு முன்பு சுனாமி ஏற்பட்டபோது சிதம்பரத்தில் நடராஜரும் சிவகாமசுந்தரி அம்மனும் முன்னதாகவே நடராஜர் கோயிலுக்கு்கொண்டு செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது அதுபோல் இந்த ஆண்டு சிதம்பரத்தில் பலத்த மழை காரணமாக நடராஜனும் சிவகாமசுந்தரி அம்மனும் எங்கும் நிற்காமல் நிலையை அடைந்தது.

விழா ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சதர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை கடலூர் மாவட்ட காவல் துறையினர் செய்திருந்தனர். நாளை பிற்பகல் சுமார் 2 மணியளவில் ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது. தமிழ்நாடு விஸ்வகர்மா முன்னேற்ற சங்கத் தலைவர் சேகர் தலைமையில் தரிசனத்திற்க்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!