Practitioner Admission in Perambalur District ITIs; Perambalur Collector Information.

பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ், பெரம்பலூர், ஆலத்தூர் மற்றும் குன்னம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 3-தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன.

இவற்றில் தற்போது 2024-25ஆம் கல்வியாண்டிற்கான பயிற்சியாளர் சேர்க்கை நடைபெற உள்ளது.

தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சிபெற 8ஆம் வகுப்பு / 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். அல்லது சம்மந்தப்பட்ட அரசு ஐ டி ஐ க்கு வந்து விண்ணப்பிக்கலாம்.

இணையதளத்தில் பதிவு செய்ய வசதி இல்லாத மாணவர்கள், தமிழகம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 136 – உதவி மையங்கள் மூலமாக சேர்க்கை பதிவை மேற்கொள்ளலாம். இம்மையங்களின் பட்டியல் மற்றும் தொலைபேசி விவரம் மேற்குறித்த இணையதள முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கான கடைசிதேதி 07-06-2024 ஆகும். விண்ணப்ப கட்டணம் ரூ 50/-ஐ விண்ணப்பதாரர் Debit Card / Credit Card / Net Banking / GPay மூலம் செலுத்தலாம். வயது வரம்பு மாணவர்களுக்கு 14 வயது முதல் 40 வயது வரை ஆகும். மாணவிகளுக்கு வயது வரம்பு ஏதுமில்லை.

மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் கலந்தாய்வுக்கு தரவரிசை பட்டியல் மற்றும் கலந்தாய்வு நடைபெறும் நாள் உள்ளிட்ட விவரங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.

குன்னம் வட்டத்திற்குட்பட்ட பெரியவெண்மணியில் இயங்கி வரும் குன்னம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் எலக்ட்ரிசியன், பிட்டர், டார்க்ஸ்ட்ருமேன் சிவில், ஸ்விங் டெக்னாலஜி ஆகிய பிரிவுகள் உள்ளது.

ஸ்விங் டெக்னாலஜி பிரிவிற்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சியும், எலக்ட்ரிசியன், பிட்டர், டார்க்ஸ்ட்ருமேன் சிவில், பிரிவிற்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.

ஆலத்துார் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஒரு வருட தொழிற்பிரிவுகளான வெல்டர், சோலர் டெக்னீசியன், இன்டஸ்டிரியல் ரோபடிக்ஸ் & டிஜிட்டல் மேனுபக்சரிங் டெக்னாலஜி, ஆகிய பிரிவுகளும், 2 வருட தொழிற்பிரிவுகளான லக்ட்ரிசியன், பிட்டர், மெக்கானிஸ்ட், மெக்கானிக் எலக்டிரிக்கல் வெகிள்ஸ், அன்வான்ஸ்டு மெக்கானிசம் டீம்,ஆகிய பிரிவுகளும் உள்ளது. வெல்டர் தொழிற்பிரிவுக்கு மட்டும் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஏனைய தொழிற்பிரிவுகளுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அசல் சான்றிதழ்கள் – டி.சி, மார்க் ஷீட், கம்யூனிட்டி சர்டிபிகேட், ஆதார், பாஸ்போர்ட் சைஸ் ஆகியவற்றுடன் அரசு வேலை நாட்களில் சம்மந்தப்பட்ட அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் செயல்படும் உதவி சேர்க்கை மையம் மூலமாக நேரில் வந்து விண்ணப்பத்தினை பதிவு செய்து கொள்ளலாம்.

ஐடிஐ படிக்கும் காலத்தில் மாணவ மாணவியருக்கு சீருடை, மூடுகாலணி, மிதிவண்டி, பாடப்புத்தகங்கள், வரைபட கருவிகள், பேருந்து பயண அட்டை மற்றும் பயிற்சிக்கு தேவையான நுகர் பொருட்கள் முதலியவை தமிழக அரசால் இலவசமாக வழங்கப்படுகிறது.

மேலும் மாதந்தோறும் ரூ.750/- உதவித்தொகையும், புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் ரூ.1000/- உயர்கல்வி உதவித்தொகையும், படித்து முடித்த பின் ஆக்ட் அப்பரடின்ஸ் மூலம் அப்பரடின்ஸ்ஷிப் மற்றும் வளாக நேர்காணல் மூலம் முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும்.

மேலும், விவரங்களுக்கு பெரம்பலூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய தொடர்பு எண்களான 94438 52306, 90479 49366, 63797 64520 மற்றும் gitiperambalur@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும், ஆலத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய தொடர்பு எண்களான 94990 55883, 94990 55884 மற்றும் govtitialathur@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும்,

குன்னம் அரசு தொழிற்பயிற்சி நிலைய தொடர்பு எண்களான 98946 97154, 98406 63297, 63790 02729 மற்றும் 04328 – 299800 மற்றும் gitikunnam@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும், பெரம்பலூர் மாவட்ட திறன் பயிற்சிஅலுவலக தொடர்பு எண்ணான 94884 51405 மற்றும் dstoperambalur@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!