மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி தெரிவித்துள்ளதாவது:
நடைப்பெற்ற மார்ச் – ஏப்ரல்2016 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் தேர்ச்சி பெறாத பள்ளி மாணவர்ள் தனித் தேர்வர்களுக்கான 2016 சிறப்பு துணைத் தேர்வுகள் பெரம்பலூர் ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் 20.06.2016 (திங்கள்கிழமை) 21.06.2016 (செவ்வாய்கிழமை) ஆகிய இரு நாட்களில் நடைபெற உள்ளது.
மேலும், இந்த சிறப்பு துணைத் தேர்வுகள் குறித்த முழு விவரங்களையும் பெரம்பலூர் மாவட்டக் கல்வி அலுவலகத்தை நேரில் அணுகி தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் தனிப்பட்ட முறையில் தேர்வர்களின் வீட்டு முகவரிக்கு இதுகுறித்து அறிவிப்பு ஏதும் அனுப்பப்பட மாட்டாது, என தெரிவித்துள்ளார்.