Preambalur : drank poison to commit suicide at the awful torture mother in law newly weds!
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், கொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சவுந்திரராஜன் இவரது மகன் தென்னரசு ( வயது 27) . வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த தென்னரசு, தற்போது சொந்த ஊரில் விவசாயம் செய்து வருகிறார். பத்து மாதங்களுக்கு முன்பு, பெரம்பலூர் மாவட்டம், கொளக்காநத்தம் கிராமத்தை சேர்ந்த பவித்ரா (22) என்பவரை இரு வீட்டார் சம்மதத்தின் பேரில் திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் தென்னரசுவின் தாய் புஷபம், மருமகள் பவித்ராவிடம் தொடர்ந்து தகராறு செய்து வந்துள்ளார். மாமியர் மருமகள் தகராறு தொடர்ந்து நீடித்து வந்துள்ளது. இதில் நொந்து போன தென்னரசு தாய் புஷ்பத்திடம், தனது மனைவிடம் தகராறு செய்வதை கைவிட்டு அமைதியாக கணவன் – மனைவி இருவரையும் நிம்மதியாக வாழ விட கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால், இதனை பொருட்படுத்தாத புஷ்பா தொடர்ந்து மருமகள் பவித்ராவிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதில் மனமுடைந்த கணவன் மனைவி இருவரும் நேற்று மாலை, கொளத்தூர் இருந்து இலுப்பைக்குடி சாலையில் வரிசைக்குளம் என்ற இடத்தில் வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்த மருத்துவர் போலீசார் இன்ஸ்பெக்டர் (பொ) கருணாநிதி தலைமையில் சென்ற போலீசார் இருவரிடன் சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து மருவத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமியர் மருமகள் கொடுமையில் புதுமண தம்பதிகள் இருவரும் ஒரே நேரத்தில் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.