பேரக்குழந்தையுடன் காணாமல் போன தனது மகளை கண்டுபிடித்து தரக்கோரி தந்தை போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், வி.களத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகள் சுதா(22), இவருக்கும் கடந்த 2 வருடத்திற்கு முன்னர் அதே பகுதியிலுள்ள வண்ணாரம்பூண்டி அறிவழகன் என்பவருக்கு திருமணம் நடைபெற்று நவனேஷ் (1)கைக்குழந்தை உள்ளது.
இந்நிலையில் கனவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சுதா கோபித்து கொண்டு, தனது குழந்தையுடன் வி.களத்தூரில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.
அறிவழகன் வேலைக்காக வெளிநாடு சென்று விட்டு கடந்த மாதம் ஊருக்கு வந்தவர் மாமனார் வீட்டிற்கு வந்து மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த வரும்படி அழைததுள்ளார்.
அதற்கு மறுப்பு தெரிவித்து பெற்றோர் வீட்டில் வசித்து சுதா அவரது கைக்குழந்தையுடன் திடீரென மாயமானார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சுதாவின் பெற்றோர் மற்றும் அறிவழகன் ஆகியோர் உறவினர்கள் சிலர் உதவியுடன் சுதாவை பல்வேறு இடங்களில் தோடியும் கிடைக்காததால் காணாமல் போன தனது மகள் மற்றும் பேரக்குழந்தையை கண்டுபிடித்துத் தரக்கோரி ரஜேந்திரன் இன்று வி.களத்தூர் காவல் நிலையத்தில், புகார் தெரிவித்தார்.
அந்த புகாரின் பேரில் எஸ்.ஐ.,சுரேஷ் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சுதா மற்றும் அவரது கைக்குழந்தை நவனேஷ் ஆகியோரை தேடி வருகிறார்.