பெரம்பலூர் அருகே உள்ள கவுல்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர்கள் நடேசன் மகன் கோவிந்தசாமி (57), சிக்கன் கவுண்டர் மகன் குருசாமி (70), விவசாயிகளான இவர்கள் இருவரும் இன்று சிறுவாச்சூர் அடுத்த மருதடி கிராமத்திற்கு சென்று பசு மாடு நன்றாக பால் கறப்பதற்காக பூசாரி ஒருவரிடம் கயிறு மந்திரித்து கொண்டு டூவீலரில் கவுல்பாளையம் செல்வதற்காக திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஊர் திரும்பி கொண்டிருந்தனர். பெரம்பலூர் துறைமங்கலம் ஏரிக்கரை பகுதியில் சாலையின் நடுவே உள்ள பிரிவில் திரும்பிய போது,
சென்னையிலிருலிருந்து திருச்சி நோக்கி அதிவேகமாக சென்ற இனோவா கார் டூவீலர் மீது மோதியது. இந்த விபத்தில் டூவீலரை ஓட்டி வந்த கோவிந்தசாமியும், பின்னால் அமர்ந்திருந்த குருசாமியும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்ககாக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இது குறித்த புகாரின் பேரில் பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்கு பதிந்து விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பியோடி தலைமறைவான கார் டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றார்.