Perambalur new bus station was around the statue of the Agricultural Association president Narayanaswamy Naidu removal of advertising banners

narayanasami-naidu

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள விவசாய சங்க தலைவர் நாராயணசாமி நாயுடுவின் சிலையை சுற்றி இருந்த விளம்பர பதாகைகளை நகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள விவசாய சங்க தலைவரின் சிலையை சுற்றி நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி அமைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகள் அகற்ற விவசாய சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர்.

அதனை தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் இணைந்து விவசாய சங்க தலைவர் சிலையை சுற்றி உள்ள விளம்பர பதாகைகளை அகற்றினர்.

இனிவரும் காலங்களில் சிலைக்கு குந்தகம் ஏற்படும் வகையிலோ மற்றும் சிலையை மறைக்கும் வகையிலோ விளம்பர பதாகைகள் நீதி மன்ற உத்தரவை மீறி அமைக்கப்பட்டால் அந்நிறுவனத்தைச் சேர்ந்த உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் முரளி அறிவிப்பு செய்து உள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!