பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் அருகே புதிதாக துவங்கி நடைபெற்று வரும் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் (சிபிஎஸ்இ) பள்ளியில் குடியரசு தினவிழா மற்றும் முதலாம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.
அப்பள்ளி சேர்மன் எ.ராம்குமார் தலைமை வகித்தார். முன்னதாக சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலில் இருந்து ஒலிம்பிக் ஜோதி எடுத்துசென்று தேரடி வீதி மற்றும் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று பள்ளி வளாகத்தில் ஏற்றப்பட்டது. பின்னர், பள்ளி மாணவ மாணவிகளுக்கான 100 மீட்டர், 200மீட்டர் தொடர் ஓட்டம் ஏவிபிஎஸ் பள்ளி மாணவ மாணவிகளின் மருத்துவராகலாம் எனும் விழிப்புணர்வு விளையாட்டு, மற்றும் பாராசூட் பிளேயிங், கராத்தே உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
விழாவில் ஜீனியர் இண்டர்நேஷ்னல் ஹாக்கி பிளேயர் பி.அஸ்வின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு கலந்து கொண்ட பெற்றோர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பரசு வழங்கினர்.
டெல்லி யுரோகான் நிர்வாகி சிராஜ்கிர்மானி, பள்ளியின் செயலாளர் ஆர்.சிவக்குமார் துணை முதல்வர் சி.மோகனசுந்தரம், பொருளாளர் பி.ரவி, பங்குதாரர்கள் சுபசுதாகர், சங்கீதா முத்துக்குமார், ஒருங்கினைப்பாளர் சாரதா செந்தில்குமார், ஹேமா மற்றும் பள்ளி ஆசிரியைகள் கயல்விழி, சுமதி, ஜோஸ் சகிலா, வனஜா, ரம்யா, சாந்தி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.