பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே கூலித்தொழிலாளி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே உள்ள காருகுடி கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி மகன் சுந்தர்ராஜ்(55), கூலித் தொழிலாளியான இவருக்கு கடந்த சில
வருடங்களாக மதுக அருந்தும் பழக்கம் இருந்துள்ளது.
இந்நிலையில் நேற்று காலை பெரம்பலூர் சென்று விட்டுவருவதாக சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை இதனைத்தொடர்ந்து சுந்தர்ராஜை அவரது குடும்பத்தார் தேடியுள்ளனர். இந்நிலையில் காருகுடி அருகே முருக்கன்குடி ஓடையில் விஷம் அருந்திய சுந்தர்ராஜ், மயங்கி கிடப்பதாக தெரிய வந்தது.
சுந்தர்ராஜை மீட்டு பெரம்பலூர்அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டார். சிகிச்சை பெற்று வந்த சுந்தர்ராஜ் இன்று அதிகாலை உயிரிழந்தார்.
இதுகுறித்து அவரது மருமகன் கோவிந்தராஜ்(33) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் மங்களமேடு காவல் நிலையத்தினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சுந்தர்ராஜுக்கு அழகம்மாள்(48) என்ற மனைவியும், சுமதி ஒரு மகளும், சுப்ரமணி என்ற மகனும்
உள்ளார்கள்.