பெரம்பலூர் அருகே காணாமல் போன இரு சக்கர வாகனங்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள கல்பாடி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா மகன் ரெங்கராஜ் (60). விவசாயி இவர் கடந்த 14ந்தேதி மாலை கால்நடைகளுக்கு தீவனம் கொண்டு வருவதற்காக கல்பாடி சிறுவாச்சூர் சாலையில் ஆப்பூரான் கோவில் அருகே உள்ளஅவரது வயலுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றார். தீவனங்களை எடுத்து செல்ல சாலையோரம் நிறுத்தி விட்டு சென்றிருந்த இரு சக்கர வாகனத்தை மர்ம நபர்கள் யாரோ திருடி சென்றுள்ளது தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த ரெங்கராஜ் 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தனது இரு சக்கர வாகனம் காணாவில்லை என மருவத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் எஸ்.ஐ.,மாரிமுத்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
இதனிடையே சம்பவம் நடைபெற்ற 14ந்தேதி அன்றே மருவத்தூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட கொளக்காநத்தம் கிராமத்தை சேர்ந்த இளையராஜா(37). மற்றும் பேரளி கிராமத்தை சேர்ந்தவர் அப்பாவு மகன் தங்கராசு(60) என்பவர்களின் இரு இருசக்கர வாகனங்களும் திருடு போனது குறிப்பிடத்தக்கது.
அடுத்தடுத்து மருவத்தூர் பகுதியில் நடந்த இந்த திருட்டு சம்பவங்கள் அப்பகுதி இருசக்கர வாகன ஓட்டிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.