பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் வரகூர் கிராமத்தை சேர்ந்தவர் செழியன் மகன் ஸ்டாலின் ( வயது 29). விவசாயி. இவர் கடந்த ஏப்.1 ந் தேதி அரும்பாவூரில் உள்ள மாமனார் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
தொண்டைமாந்துறை பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்த போது அரும்பாவூரில் இருந்து பெரம்பலூர் நோக்கி வந்த லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஸ்டாலின் படுகாயமடைந்தார். உடனடியாக அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துமனையில் கொண்டு சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்ற அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டும் சிகிச்சையின் போது ஸ்டாலின் இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து அரும்பாவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விழுப்புரம் மாவட்டம் கச்சிராப்பாளையத்தை சேர்ந்த லாரி டிரைவர் சுருளிவேல் (35) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த ஸ்டாலினுக்கு சுகன்யா (25) என்ற மனைவி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.