Prime Minister Modi addressed the Namakkal parliamentary constituency volunteer agencies in the video conference
பாரதிய ஜனதா கட்சியின் நாமக்கல் பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குச்சாவடி முகவர்களிடம் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் காணொளி காட்சி மூலம் கலந்துரையாடினார்.
இதில் தமிழக பாஜக தலைவர் திருமதி. தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சிக்கு முன்னதாக தமிழசை சவுந்தரராஜன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழகத்தில் உள்ள 5 பாராளுமன்ற வாக்குச்சாவடி முகவர்களிடம் பாரத பிரதமர் மோடி அவர்கள் உரையாடுகிறார். இது தொண்டர்களிடையே மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தும். வருகாலத்திலும் தொடர்ந்து பாஜக வினரிடம் பிரதமர் பேசுவார். ரபேல் போர் விமானம் வாங்குவது தொடர்பாக மத்திய அரசு நேர்மையாக நடந்துள்ளது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவித்துள்ளது ஆட்சியாளரிடமும், அதிகாரிகளிடமிருந்து கிடைத்திருக்கின்ற தகவல்களை ஆராய்ந்து தீர்ப்பு வழங்கியுள்ளலாம்.ஆலைக்கு எதிராக கருத்துகளை சொல்லும் திமுக. ஆட்சியில் இருந்த போது தான் உற்பத்தியை அதிகரிக்க அனுமதி வழங்கியுள்ளது. திமுக ஆட்சியில் தான் ஆலையில் உற்பத்தி அதிக அளவில் நடைப்பெற்றது.
எனவே, அனைவரும் தவறு செய்துள்ளார்கள். மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும், மக்களுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படக்கூடாது என்ற அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை ஆராய்ந்து பார்க்க வேண்டும். தமிழக முதல்வர் ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் பசுமை தீர்ப்பாயம் வழங்கியுள்ள தீர்ப்பு எதிராக அரசு சார்பில் மேல் முறையீடு செய்யப்படும் என அவர் சொல்லி இருக்கிறார் பொறுத்திருந்து பார்ப்போம். சட்ட ரீதியாக தீர்ப்பை பெற்று தருவோம் என முதல்வர் உறுதி கொடுத்தால் மக்கள் போராடமாட்டார்கள்.
சட்ட விதிகளுக்கு உட்பட்டு முதல்வர் அந்த மக்களுக்கு நம்பிக்கை எற்படுத்த வேண்டும். மேல்முறையீடு செய்வதாக கூறுகின்றார் சட்ட ரீதியாக போராட வேண்டும்.சட்ட ரீதியாக தீர்ப்பை பெற்று தருவோம் என அரசு உறுதி கொடுத்தால் மக்கள் போராடமாட்டார்கள். காவேரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட தமிழக பாஜக எதிர்ப்பு தெரிவிக்கும்.
மறைந்த திமுக முன்னாள் தலைவரும், முதல்வருமான கருணாநிதி சிலை திறக்கும் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்ளுவதாக செய்திகள் வருகிறது என்ற கேள்விக்கு கல்ந்து கொள்வது அவருடைய விருப்பம் என்றார்.