Prime Minister Modi is coming to Perambalur constituency! Election campaign in support of Parivendar!!
பெரம்பலூர் எம்.பி தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில், ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து, பெரம்பலூர் தொகுதிக்கு வரும் ஏப்.9 தேதி பெரம்பலூர் தொகுதியில் பிரச்சாரம் செய்ய உள்ளார். அன்றைய தினம் சென்னைக்கு வருகிறார். அங்கு ரோட் ஷோ உள்ளிட்ட நிகழ்ச்சிகளை முடித்த பிறகு வேலூர், பெரம்பலூருக்கு வருகை தந்து கூட்டணி கட்சியனருக்கு வாக்கு சேகரிக்கிறார். இது கட்சியினரிடையே பெரும் வரவேற்பையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் அமைச்சர் ஆ.ராஜா மற்றும் அமைச்சர் நேருவின் சொந்த ஊர்களான பெரம்பலூர், லால்குடி உள்ள பெரம்பலூர் எம்.பி தொகுதியை கைப்பற்றி ஒரே கல்லில் 2 மாங்காய் என்பது போல வெற்றி வாகை சூட பாஜக கூட்டணி தீவிர களப்பணி செய்து வருகிறது.