Prime Minister’s Entrepreneurship Model Scheme for Fisheries and Aquaculture: Perambalur Collector’s Call

தமிழகத்தில் புதிய தொழில் முனைவோர்களை ஊக்குவித்து அவர்களை மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளா;ப்பில்; அதிக முதலீடு செய்ய வைத்திடும் நோக்கில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் “மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பினருக்கான தொழில் முனைவோர் மாதிரி திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

மீனவர்கள், மீன்வளர்ப்போர், சுய உதவிக்குழுக்கள், கூட்டுப் பொறுப்பு குழுக்கள், மீன்வளர்ப்போர் உற்பத்தியாளர் அமைப்புகள், தனிநபர் தொழில் முனைவோர், தனியார் நிறுவனங்கள் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். பொதுப் பிரிவினருக்கு மொத்த திட்ட மதிப்பீட்டில் மத்திய மற்றும் மாநில அரசின் நிதி உதவியாக அதிகபட்சமாக ரூ.1.25 கோடியும் (25 விழுக்காடு), மற்றும் ஆதி திராவிடர்பழங்குடியினர், மகளிருக்கு மொத்த திட்ட மதிப்பீட்டில் மத்திய மற்றும் மாநில அரசின் நிதி உதவியாக அதிகபட்சமாக ரூ.1.50 கோடியும் (30 விழுக்காடு) வழங்கப்படும்.

மேலும் தகவல்களுக்கு அரியலூர் மாவட்ட மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்திலோ அல்லது மீன்வள ஆய்வாளர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அறை எண்.2, முதல் தளம், எஸ்.கே.சி. காம்பளக்ஸ், (புதிய பேருந்து நிலையம் அருகில்) பெரம்பலூர் என்ற அலுவலகத்தில் நேரிலோ அல்லது 04329 – 228699 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்.31.07.2021 ஆகும். மேலும் இதற்குரிய விண்ணபங்கள் மற்றும் கூடுதல் விவரங்களை www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!