Private companies; Those coming to work from outside the district should be given jobs only after making sure that there is no corona infection: Perambalur Collector

பெரம்பலூர் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாடு அரசு உத்தரவின் பேரில், பெரம்பலூர் மாவட்டத்தில் வெளிநாடு, வெளிமாநிலம், வெளிமாவட்டங்கள் (குறிப்பாக சென்னை) போன்ற இடங்களில் இருந்து வேலைக்கு மற்றும் இதர விசயமாக வரும் நபர்களை வட்டார அளவில் 14 நாட்கள் தனிமைபடுத்தப்பட்டு அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனாவிற்காக பிரத்தியேகமாக ஆய்வகம் தொடங்கப்பட்டு நாள் ஒன்றிற்கு சராசரியாக 450 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன. பரிசோதனை செய்யப்படும் அனைத்து நபர்களுக்கும் 24 மணி நேரத்திற்குள் பரிசோதனை முடிவு அறிவிக்கப்பட்டு, தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்கள் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களுடன் தொடர்பில் உள்ளவர்களை வீட்டிலேயே தனிமைபடுத்தப்பட்டு தீவிர தொடர் கண்காணிப்பில் வைக்கப்படுகின்றனர். அவர்கள் அனைவருக்கும் சத்து மாத்திரைகள் மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அரசு தனியார் மருத்துவமனைகளில், பிரத்தியேகமாக கொரோனா நோய்த்தொற்று உள்ள நபர்களுக்காக மொத்தம் 992 படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் காய்ச்சல், சளி, இருமல், தொண்டைவலி, தசைவலி, மூச்சு விடுவதில் சிரமம், சுவையின்மை, நுகர்ச்சியின்மை, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்றவற்றில் ஏதாவது அறிகுறி தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்துகொள்வது அவசியம். மேலும் கொரோனா பற்றிய சந்தேகங்களை 24 மணிநேரமும் கொரோனா கட்டுபாட்டு அறை எண் 1077-ஐ தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம். மேலும், இ-சஞ்சீவினி செயலியை இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து தங்களுக்கு ஏற்படும் கொரோனா பற்றிய சந்தேகங்களை காணொலி காட்சி மூலம் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ளலாம்.

பெரம்பலூர் மாவட்டம் தமிழகத்திலேயே மிகக்குறைந்த அளவில் கொரொனா தொற்று பாதிக்கப்பட்ட மாவட்டமாகவும், கடந்த ஒருமாதகாலமாக ஒற்றை இலக்க எண்ணில் தொடர்ந்து உள்ளது. மேலும், கொரோனா நோய்த்தொற்று இல்லாத மாவட்டம் என்ற நிலையை அடைய பொதுமக்கள் சமூக இடைவெளி கடைபிடித்தல், சோப்பு திரவம் கொண்டு கைகழுவுதல், முகக்கவசம் அணிதல் போன்ற செயல்முறைகளை தொடர்ந்து கடைபிடித்து ஒத்துழைப்பு தரவேண்டும், பெரம்பலூர் மாவட்டத்திற்கு பணி மற்றும் வேறு காரணங்களுக்கு வெளியில் வருகை புரிவோர் கொரோனா தொற்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதோடு, தனியார் நிறுவனங்கள், ஊழியர்களை கொரோனா தொற்று இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே பணி வழங்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!