பெரம்பலூர் அருகே உள்ள லாடபுரம் கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது:
லாடபுரம் கிராமத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீர் கிணற்றுக்கு அருகிலேயே தனியாருக்கு சொந்தமான மினரல் வாட்டர் கம்பனி இயங்கி வருகிறது.
தற்போது நிலவி வரும் வறட்சியின் காரணமாக குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில்,
தனியார் மினரல் வாட்டர் நிறுவனம் நாள்தோறும் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீரை ஆயிரம் அடி ஆழத்தில் இருந்து உறிஞ்சி எடுத்து திருச்சி, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் கேன் கேனாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதனால், அந்நிறுவனத்தை சுற்றுப் பகுதிகளில் உள்ள விவசாய பாசனக் கிணறுகள், மற்றும் கால்நடை வளர்ப்பவர்களின் கிணறுகளில் தண்ணீர் நீர்மட்டம் வெகுவாகா குறைந்து காணப்படுகிறது.
இதனால் கடும் அவதிப்படுகின்றனர். மேலும், பொதுமக்கள் குடிநீர் கிணற்று அருகே அந்நிறுவனத்தின் ஆயிரம் அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணறு அமைப்பபட்டுள்ளது.
பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய மிக குறைந்தளவு குடிநீர் வாரத்திற்கு ஓரிரு முறை கூட கிடைக்காமல் அவதிப்படுவதாகவும்,
அதனால், தனியார் மினரல் வாட்டர் கம்பனியை நிரந்தரமாக மூடக் கோரி அக்கிராமத்தை சேர்ந்த கிராமக்கள் திராளக வந்து மனு கொடுத்தனர்.
மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். மேலும், அந்த தனியார் மினரல் வாட்டர் நிறுவனம் மூடப்படும் என தெரிகிறது.