பெரம்பலுார் அருகே உள்ள கொளத்துார் கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி மகன் பிரதீப் (13). இவர் பெரம்பலுாரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் இன்று நடந்த அரையாண்டு தேர்வில் காப்பி அடித்ததாக தெரிகிறது. இதை கண்காணித்த ஆசிரியர் பிரதீப்பை தேர்வு அறையிலிருந்து வெளியில் செல்லுமாறு தெரிவித்தாக தெரிகிறது.
இதனால் அவமானமடைந்த பிரதீப் பள்ளியின் இரண்டாவது மாடியிலிருந்து கீழே குதித்தார். இதில் பிரதீப்பின் கால் மற்றும் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு பெரம்பலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பெரம்பலுார் போலீஸார் விசாரிக்கின்றனர்.