
Private Travels – Two killed near Namakkal in bike collision
நாமக்கல் அருகே தனியார் டிராவல்ஸ் வேன் மீது இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் ஓமலுாரைச் சேர்ந்த இருவர் பரிதாபமாக உயரிழந்தனர்.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் பைக் மெக்கானிக் பி. சுகுமார் (31).இவரும் ஓமலுாரைச் சேர்ந்த ஜி.அண்ணாமலை (27) என்பவரும் நேற்று முன்தினம் இரவு திருநள்ளாறுக்கு இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டுள்ளனர்.இரு சக்கர வாகனத்தை சுகுமார் ஓட்டிச் சென்றுள்ளார். இரவு 1.30 மணியளவில் நாமக்கல் அருகே வளைப்பட்டி பிரிவில் சென்றபோது, எதிரே திருச்சியில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற தனியார் டிராவல்ஸ் வேன் மீது இரு சக்கர வாகனம் அதிவேகமாக மோதியது.
இதில் துாக்கி வீசப்பட்ட அண்ணாமலை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த சுகுமார் சேலம் அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக மோகனுார் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.