Procedures for transferring employment record from district to district: Perambalur Collector Information
பெரம்பலூர் கலெக்டர் ஸ்ரீவெங்கபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்துள்ள பதிவுதாரர்கள் அவர்களது வேலைவாய்ப்பு பதிவினை மாவட்டம் விட்டு மாவட்டம் மாற்றுவதற்கான நடைமுறையில் வட்டாட்சியர் அளவில் வழங்கப்படும் குடும்ப குடிப்பெயர்ச்சி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை இவைகளை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்ற நடைமுறை அமுலில் இருந்து வருகிறது.
தற்போது வேலைவாய்ப்பு பதிவை மாவட்டம் விட்டு மாவட்டம் மாற்றுவதற்கான நடைமுறையை எளிமைப்படுத்தும் விதமாக பின்வரும் ஆவணங்களுள் ஏதேனும் ஒரு ஆவணத்தை சமர்ப்பித்து மாற்றிக்கொள்ளலாம். இதனடிப்படையில் வேலைவாய்ப்பு பதிவை மாற்ற பதிவுதாரர்களால் சுயசான்றளிக்கப்பட்ட குடும்ப அடையாள அட்டை (அ) வாக்காளர் அட்டை (அ) ஆதார் அட்டை (அ) கடவுச் சீட்டு (அ) ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு ஆவணத்தை மட்டும் சமர்ப்பித்தால் போதுமானது என தொpவித்துள்ளார்.