Professional Guidance Training Camp for Namakkal on behalf of Entrepreneurs Development Center
நாமக்கல் : தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பட்டு மையத்தின் உதவியுடன் நாமக்கல் மாவட்ட சிறு, குறு தொழில் கூட்டமைப்பு சார்பில் நீங்களும் தொழில் தொடங்கலாம் என்ற தலைப்பில் ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் கோஸ்டல் ஓட்டலில் நடைபெற்றது.
நடிஸ்டியா தலைவர் இளங்கோ நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். முகாமில் திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்தி வேலூர், மோகனூர், சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 100 க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் நடிஸ்டியா செயலாளர் சண்முகம் , துணை தலைவர் அருண், தொழில் முனைவோர் ஆலோசகர் ஜெய்சங்கர், முன்னோடி வங்கி மேலாளர் வடிவேல் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு லாபகரமான தொழில் வாய்ப்புகள், தொழில் தொடங்க தேவையான தொழில் நுட்பம், வீட்டிலிருந்து செய்யக்கூடிய தொழிகள், நவீன விவசாயம் சார்ந்த தொழில் வாய்ப்புகள், தொழில் தொடங்க தேவையான வங்கி கடன், மார்க்கெட்டிங் வாய்ப்புகள், 25 முதல் 40 சதவீதம் வரை அரசு மானியங்கள் போன்றவை குறித்து விரிவாக விளக்கினர்.