Projects worth Rs.6.43 Crores in Perambalur District: Tamil Nadu Chief Minister inaugurated on video conference!
பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.6.43கோடி மதிப்பில் முடிவுற்றுள்ள பல்வேறு திட்டப்பணிகளை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காணொளிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
ரூ.3.95 கோடி மதிப்பில் கட்டப்பட்ட ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தையும், பெரம்பலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அம்மாபாளையத்தில் ரூ.22.65 லட்சம் மதிப்பிலும், வேப்பந்தட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பாண்டகப்பாடியில் ரூ.25.37 லட்சம் மதிப்பிலும் கட்டப்பட்டுள்ள புதிய ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டங்களையும், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் பெரம்பலூர் ஒன்றியத்திற்குட்பட்ட அம்மாபாளையம், களரம்பட்டி, மேலப்புலியூர் பகுதிகளில் தலா ரூ.11.97 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள குழந்தைகள் மைய கட்டங்களையும், வேப்பந்தட்டை ஒன்றியம் பெரியவடகரையில் ரூ.10.93 லட்சம் மதிப்பிலும், வேப்பூர் ஒன்றியம் கீழப்பெரம்பலூரில் முறையே ரூ. 11.97 லட்சம், ரூ.14 லட்சம் மதிப்பிலும் கட்டப்பட்டுள்ள குழந்தைகள் மைய கட்டடங்களையும் என மொத்தம் ரூ.515.83 லட்சம் மதிப்பிலான புதிய கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் காணொளிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
மேலும், பள்ளிக்கல்வித்துறையில் நபார்டு திட்டத்தின் மூலம் பெரம்பலூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ. 42.72 லட்சம் மதிப்பிலும், செஞ்சேரி மற்றும் ரஞ்சன்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் ரூ. 84 லட்சம் மதிப்பிலும் என மொத்தம் ரூ.126.72 லட்சம் மதிப்பிலான புதிய வகுப்பறை கட்டடங்களையும் தமிழ்நாடு முதலமைச்சர் காணொளிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, கலெக்டர் கற்பகம், தலைமையில் எம்எல்ஏபிரபாகரன், திமுக மாவட்ட செயலாளர் சி.இராஜேந்திரன் ஆகியோர் பெரம்பலூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறை கட்டடத்தில் குத்துவிளக்கேற்றி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கினர்.
அதனைத்தொடர்ந்து, ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் ஒன்றியக்குழுத்தலைவர் திரு.ந.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் முன்னிலையில் குத்துவிளக்கேற்றி, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கட்டடங்களைப் பார்வையிட்டனர்.