Protest in Veppanthattai demanding the construction of a bridge near Perambalur: Officials hold Peace talks!
பெரம்பலூர் மாவட்டம், தொண்டைமாந்துறை ஊராட்சிக்கு உட்டபட்ட அய்யர்பாளையம் கிராமத்தில் இருந்து செம்மண் குட்டைக்கு செல்லும் வழியில் உள்ள வக்னாப்பாடி ஆற்றின் மீது, பாலம் கட்டி தர வேண்டும், அரசியல்வாதிகள், அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். அதன் ஒரு பகுதியான இன்று,இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் பாடை போராட்டம் நடத்தினர். மாவட்ட செயலாளர் சக்திவேல் தலைமையில் நடந்தது.
பெரியசாமி, விஜயகுமார், சிவகுமார், தாமோதரன், ராஜா சங்கர், ராஜேந்திரன், நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத் தலைவர் சலாவுதீன் கண்ட உரை ஆற்றினார். மாவட்ட தலைவர் சரவணன், மாவட்ட பொருளாளர் அறிவழகன், மாவட்ட துணை செயலாளர் வேல்முருகன், மாவட்ட செயற்குழு பிரியா, மாவட்ட குழுதுரை
பாஸ்கரன், சடையப்பன், உள்ளிட்ட பலர் டி கலந்து கொண்டனர்,
அய்யபாளையம் செம்மண் குட்டை பகுதியில் இருந்து ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்து கொண்டவர்கள், வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வரும் வரை கலைந்து செல்வதில்லை என முடிவு செய்து காத்திருப்பு போராட்டமாக நடத்தினர். மாலை 3 மணி அளவில் வட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. அதில்,
ஏடிஎஸ்.பி தங்கவேல், அரும்பாவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம், நீர்வளத்துறை, பொதுப்பணித்துறை, அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினர்
வரும் நிதியாண்டில் நிச்சயமாக பாலம் அமைத்து தருவதாக உறுதி அளித்தனர் காத்திருப்பு போராட்டம் விலக்கிக் கொண்டனர்.