Proud to be an Indian, International Businessman DATO S PRAKADEESH KUMAR Speech at the Republic Day function of Perambalur Private School!


பெரம்பலூரில் நேற்று தனியார் பள்ளியில் நடந்த குடியரசு தின விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட, பன்னாட்டு தொழிலதிபர் டத்தோ பிரகதீஷ் குமார் மாணவர்களிடம் பேசியதாவது: நான் இந்த பள்ளியில் முன்னாள் மாணவன் என்பதை பெருமை கொள்கிறேன். இந்த பள்ளியில் எல்கேஜி முதல் நான்காம் வகுப்பு வரை படித்தேன். அப்போது கூரை கொட்டகையாக இருந்தது. சுமார் 80 பேர் படித்து கொண்டு இருந்தனர். பின்னர், வேறு பள்ளிக்கு மாறுதலாகி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

நான் மலேசியாவிற்கு செல்லும்போது சாதாரண பொறியாளர் பணிக்கு சென்றேன். அங்கு பலவித இன்னல்களுக்கு பின்னரே என்னால் தலை நிமிர முடிந்தது. ஒவ்வொரு கஷ்டமும் எனக்கு ஒரு பாடத்தை கற்றுக் கொடுத்தது. நான் வேலையில் சேர்ந்த போது எனது முதலாளி எப்பொழுது நள்ளிரவு இரண்டு மணி ஆனாலும் அவர் வேலையை விட்டு செல்லும் பொழுது அவருடைய செவேன், பின்னர் காலை 8 மணிக்கு வேலைக்கு வந்து விடுவேன். ஒரு நாள் ஒன்றுக்கு 18 மணி நேரம் வேலை செய்கிறேன் இந்தியாவுக்கு வந்தால் மட்டுமே ஓய்வெடுக்கிறேன். ஒவ்வொரு மனிதனும் முயன்றால் முடியாதது எதுவுமில்லை. முயற்சியை மட்டும் கைவிட்டு விடாதீர்கள். தோல்வியை கண்டு துவண்டு விடாதீர்கள். ஆசிரியர்கள் பெற்றோர்கள் பேச்சை வழி கேட்டு முன்னேற்ற பாதையில் செல்லுங்கள்.

மலேசியாவில் நான் லிக்கர் தொழிலில் மோனோபோலியாக இருந்தாலும் பல்வேறு தொழிலில் ஈடுபட வேண்டும் என்பதால் பல தொழில்களில் ஈடுபட்டு வருகிறேன். நானும் உங்களைப் போன்ற சாதாரண விவசாய குடும்பத்தில் தான் பிறந்தேன். பள்ளி விடுமுறை நாட்களில் சாணி எடுப்பேன். வயல்களில் தண்ணீர் பாய்ச்சுவேன். உண்மை நேர்மை இருந்ததால்தான் இந்த நிலைமையில் உள்ளேன். எல்லோருக்கும் ஒரு திறமை உள்ளது விடாமுயற்சியுடன் போனால் வெற்றி கிடைத்தே தீரும்.

மலேசிய சிங்கப்பூர் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் தொழில்கள் தொடங்கினாலும், அதற்கு எனக்கு மிகவும் உறுதுணையாக இருப்பது மலேசியா அரசுதான், அந்த அரசு அமைச்சர்கள் என்னை பலமுறை எங்கள் நாட்டில் தொழில் செய்கிறீர்கள் எங்கள் நாட்டு பிரதிநிதியாக மாறுங்கள் என என்னிடம் தெரிவித்தார்கள். இருந்தாலும் நான் மலேசியாவை மறக்க மாட்டேன் இருந்தாலும் என் தாய் நாடு இந்தியா. இந்திய குடிமகனாக இருப்பதே பெருமையாக கருதுகிறேன். அதனால்தான் இது நாள் வரை நான் இந்தியாவின் பாஸ்போர்ட்டையே வைத்துள்ளேன் என பேசினார். இதனால் உற்சாகம் அடைந்த மாணவர்கள் கைதட்டி பாராட்டினர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!