பெரம்பலூர் மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர்கள் மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள், மத்திய கூட்டுறவு வங்கி அலுவலர்களுக்கு அரசின் சிறப்பு திட்ட கலந்தாய்வு கூட்டம், மண்டல இணைப்பதிவாளர் சிவ.முத்துக்குமாரசாமி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் இணைப்பதிவாளர் சிவமுத்துக்குமாரசமி பேசியதாவது:
மத்திய அரசு ரு.500 மற்றும் ரூ.1000 மதிப்பிலக்க ரூபாய் நோட்டுகள் செல்லுபடியாகும் நிலையை விலக்கிக் கொண்டதினைத் தொடர்ந்து விவசாயிகள் பயிர் சாகுபடி மேற்கொள்ள ஏதுவாகவும், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு தொடர்ந்து பயிர்க்கடன் வழங்குவதற்காகவும், விவசாயிகளின் வேளாண் சார்ந்த பணிகளுக்கு உதவிடும் வகையிலும் கீழ்க்கண்ட வழிகாட்டு நெறிமுறைகள் தெரிவிக்கப்ட்டுள்ளது.
அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள திட்டம் தொடர்பாக தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கத் தலைவர்கள் மற்றும் செயலர்களுக்கு விளக்கக் கூட்டத்தினை உடனடியாக கூட்டி. இத்திட்டம் குறித்து எடுத்துரைத்து உடன் இத்திட்டத்தினை சீரிய முறையில் செயல்படுத்திட வேண்டும்.
பயிர்க்கடன் வழங்கும் பணியினை முனைப்புனடன் செயல்படுத்தி, கடன் அனுமதித்த 48 மணி நேரத்திற்குள் இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்படி விவசாயிகள் டிராக்கப் பகுதியினை படிவத்தை உறுதி செய்திட வேண்டும்
தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் தற்போதுள்ள நடைமுறைகளைப் பின்பற்றி விவசாய உறுப்பினர்களுக்குத் தொடர்ந்து பயிர்க்கடன்களை அனுமதிக்க வேண்டும். தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்க அளவில் பயிர்க்கடன் அனுமதிப்பதில் உள்ள அதிகாரத்தில் எவ்வித மாற்றமும் இல்லை.
இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்பால் தற்பொது நிலவிவரும் பணநெருக்கடி சூழ்நிலை காரணமாக விவசாயிகள், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் கடன் பெற இயலாத சூழ்நிலையில், வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த பணியினை மேற்கொள்ள இயலாத நிலை உள்ளது.
இப்பிரச்சனைக்கு தற்காலிகமான தீர்வு காணும் விதமாக. தற்பொது தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்ககளில் உறுப்பினா;களாக உள்ள விவசாயிகளை. மத்தியக் கூட்டுறவுக் வங்கி கிளையில் கணக்கு ஒன்றினைத் துவக்கி. அவர்களுக்கு காலதாமதமின்றி பயிh;க்கடன் வழங்க ஏற்பாடுகள் செய்து மாநிலத்தில் வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த பணிகள் தடையின்றி நடைபெற வழிவகை செய்யப்பட வேண்டும்.
தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் உள்ள உறுப்பினர்களுக்கு பயிர்க்கடன் வழங்க மத்தியக் கூட்டுறவ வங்கிகள் தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கிக்கு கடன் விண்ணப்பத்தினை டிராவல் அப்ளிகேஷன் சமர்ப்பிக்க வேண்டும். தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் தங்கள் பணிப்பகுதியில் சாகுபடி செய்யும் பயிர்கள். பருவ காலம் மற்றும் கடந்த ஆண்டு சாகுபடி செய்த பயிh; சாகுபடி முறை ஆகியவற்றின் அழப்படையில் கடன் வழங்க வேண்டும்
மத்தியக் கூட்டுறவு வங்கியின் கடன் பெறும் தகுதிக்குட்பட்டு. கடன் தொகையை மத்திய வங்கியின் நடப்பபு கணக்கு ஒன்றில் தமிர்;நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி வரவு வைக்க வேண்டும்.
மத்தியக் கூட்டுறவு வங்கிகள் தமிழ்;நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கியின் நடப்புக் கணக்கில் உள்ள தொகையை மின்னனு பணப்பாpமாற்றம் வாயிலாக இந்திய ரிசர்வ் வங்கி அல்லது தங்களது விருப்பத்திற்கேற்ப மாவட்டத்திலுள்ள ஏதாவது தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளைக்கு மாற்றம் செய்து கொள்ள வேண்டும்.
தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்க உறுப்பினர்கள். மத்தியக் கூட்டுறவு வங்கிக் கிளையில் கணக்கு துவக்க ஏதுவாக, கணக்கு தொடங்கும் விண்ணப்பத்துடன் கீழ்க்கண்ட ஆவணங்களை மத்தியக் கூட்டுறவு வங்கிக் கிளைக்கு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கம் சமர்ப்பிக்க வேண்டும்.
அடையாளச் சான்று (ஏதேனும் ஓர் ஆவணம்) ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், பான்கார்டு, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, அதாவது தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் உறுப்பினார்களின் சேமிப்பபுக் கணக்கு விவரம், முகவரி போன்ற அனைத்து விவரங்களையும் உறுப்பினர்கள் வாரியாக சிடி யில் பதிவு செய்து மத்தியக் கூட்டுறவு வங்கியின் கிளைக்கு அனுப்ப வேண்டும். இருப்பிடச் சான்று ஆதார் அட்டை இருப்பின் இருப்பிடச் சான்று தேவையில்லை,
தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கம் அளிக்கும் உறுப்பினர் விவரங்களைக் கொண்டு மத்தியக் கூட்டுறவு வங்கிகளின் கிளைகளில். தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் பயிர்க்கடன் பெறும் உறுப்பினர்களுக்கு, உங்கள் வாடிக்கையாளா;கள் அறிதல் விதிமுறைகளுக்கு (KYC NORMS) உட்பட்டு NO FRILL கணக்கு மேற்குறிப்பிட்டபடி உடன் துவக்க வேண்டும் அதாவது கணக்குகள் துவங்க தொகை எதனையும் விவசாயிகள் செலுத்தத் தேவையில்லை.
மத்தியக் கூட்டுறவு வங்கிக் கிளை, பெறப்பட்ட விண்ணப்பப்படிவங்களை கூர்ந்தாய்வு செய்து தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் பயிர்க்கடன் பெறும் உறுப்பினர்களுக்கு கணக்கைத் துவக்க வேண்டும்.
தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம். விவசாயிகளுக்கு பயிர்க்கடனை அனுமதித்த உடன். அதற்குரிய டிராவல் அப்ளிகேஷனை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிக்கு அனுப்ப வேண்டும் இத்துடன் உறுப்பினர் வாரியாக கீழ்க்காணும் விவரங்களை இணைத்து அனுப்ப வேண்டும். உறுப்பினர் பெயர், மத்தியக் கூட்டுறவு வங்கியில் உறுப்பினரால் துவக்கப்பட்ட கணக்கு எண், வரவு வைக்கப்பட வேண்டிய தொகை, பயிர்க்கடனின் ரொக்கப்பகுதி மட்டும்
தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் பத்தி 9 இல் குறிப்பிட்டுள்ளவாறு பயிர்க்கடன் பெறும் விவசாயிகளுக்கான ரொக்கப் பகுதியினை ரொக்கமாக விடுவிக்கும் முன் மொழிவை சம்பந்தப்பட்ட மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளின் கிளைகளுக்கு அனுப்ப வேண்டும், கிளைப் பணியாளர்கள் அவ்விவரங்களிலுள்ள உறுப்பினர் கணக்கு எண்ணை சரிபார்த்து.
முன் மொழிவில் கோரப்பட்டுள்ள கடன் தொகையை சம்பந்தப்பட்ட தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்ககளில் பயிர்காசுக் கடன் கணக்கில் பற்று வைத்து, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்க உறுப்பினர்களின் தனிநபர் கடன் கணக்கிற்கு PACCS INDIVIDUAL CROP LOAN வரவு வைக்க வேண்டும்.
மேற்கண்டவாறு தனிநபர் கடன் கணக்கில் வரவு வைக்கப்பட்ட தொகை இந்திய ரிசர்வ் வங்கியினுடைய வழிகாட்டுதலின்படி. விவசாயிகளுக்கு விடுவிக்கப்படும் தற்பொது. ரு 25.000 வரை ஒரு வாரத்திற்கு விடுவிக்கப்படும் மாற்றங்கள் வரும்பொது அதற்கேற்றவாறு தொகை விடுவிக்கப்படும், என்று தெரிவித்துள்ளார். சரக துணைப்பதிவாளார் த.பாண்டித்துரை மற்றும் சங்க தலைவர்கள் துறை அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.