provided prize money of Rs 10 lakh to the village perambalur collector breaking untouchable

பெரம்பலூர் : தீண்டாமை கடைபிடிக்காத மற்றும் மத நல்லிணக்கத்துடன் வாழும் கிராமத்திற்கு தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் சார்பில் ஆண்டு தோறும் ரூ.10 லட்சம்- மதிப்பிலான பரிசுத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 2016-2017ஆம் ஆண்டிற்கான தீண்டாமை கடைபிடிக்காத மற்றும் மத நல்லிணக்கத்துடன் வாழும் ஆதிதிராவிடர் கிராமமாக நொச்சிக்குளம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

தேர்ந்தெடுக்கப்பட்ட நொச்சிகுளம் கிராமத்திற்கு ரூ.10,00,000-த்திற்கான காசோலையினை இன்று, ஆட்சியரகத்தில், மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா, ஆலத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோவனிடம் வழங்கினார்.

இத்தொகை மூலம் நொச்சிக்குளம் கிராமத்திற்கு தேவையான குடிநீர் வசதி மற்றும் மேம்பாடு செய்தல், பாதை வசதி மேம்பாடு செய்தல், பள்ளிக்கூட கட்டிடம் சீர் செய்தல், பள்ளி மற்றும் குழந்தைகள் நல மைய கட்டிடம் கட்டுதல், கால்நடை தண்ணீர் தொட்டி கட்டுதல், புதிய விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள முடியும்.

மேலும், ஊராட்சியில் உள்ள அனைத்து மக்களுக்கும் பயன்படும் வகையில் தேவையான வளர்ச்சித் திட்ட பணிகளையும் மேற்கொள்ளலாம்;

மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் (பொ) மனோகரன் உடனிருந்தார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!