Providing products to schools in Perambalur District Legal Services Commission!
தேசிய சட்டப்பணிகள் ஆணைய நிதியிலிருந்து இந்திய முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் முதற்கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள 5 பள்ளிகளுக்கு கம்பியூட்டர், பீரோ மேஜை, நாற்காலிகள், சட்டப் புத்தகங்கள் வாங்க உத்தரவாகி உள்ளது.
அதில் பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் பெரம்பலூர், அரும்பாவூர் செட்டிக்குளம், பாடாலூர், குன்னம் அரசினர் மேல்நிலைப் பள்ளிகளுக்கு வழங்கும் விழா பெரம்பலூர் மாவட்ட அமர்வு நீதிபதி எஸ்.ராஜமாணிக்கம் தலைமையில் பெரம்பலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்மொழிதேவி, தலைமையாசிரியர்கள், நீதிபதிகள் அரசு வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் வர்க்கறிஞர்கள் சங்கம், அட்வகெட்ஸ் அசொசியெசன் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், நீதிமன்ற ஊழியர்கள், காவல்துறையினர் கலந்து கொண்டனர்.