Providing scholarships on behalf of Whatsapp Social Networking Service in Perambalur

பெரம்பலூர் ஹேப்பி டீம் 2.0 என்ற வாட்ஸ் அப் சமூக வலைதள சேவைக்குழு சார்பில் கல்வி உதவி தொகை வழங்கல் மற்றும் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

பெரம்பலூர் ஹேப்பி டீம் 2.0 என்ற வாட்ஸ் அப் சமூக வலைதள சேவைக்குழு சார்பில் இயன்றை செய்வோம் இல்லாதவற்கு என்ற தாரக மந்திரத்தை நோக்கமாக கொண்டு செயல்படுகிறது. இந்த சேவைக்குழு மருத்துவ செலவு, அறுவை சிகிச்சை, கண் அறுவை சிகிச்சை, கல்வி உதவி, மதிய உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் போன்றவைற்றை செய்து வருகிறது.

இதன்படி 8 வது சேவை திட்ட விழா நேற்று மனநலம் பாதிக்கப்பட்டோர் மையமான பெரம்பலூர் வேலா கருணை இல்லத்தில் நடந்தது. விழாவிற்கு பா.ஜ.க மாநில செயற்குழு உறுப்பினர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். குழு உறுப்பினர்கள் சுந்தர்ராஜ், சரவணசாமி, கருணை இல்ல நிர்வாகி அருண் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக ஊர்க்காவல்படை மண்டல தளபதி அரவிந்தன் கலந்து கொண்டு இரண்டு மாணவர்களுக்கு உயர் கல்வி உதவி தொகைக்கான வரைவோலை ரூ. 20 ஆயிரத்தை வழங்கினார்.

பின்னர் வேலா கருணை இல்லத்திற்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து அங்குள்ள மனநலம் பாதிக்கப்பட்ட 100க்கு மேற்பட்டோருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பொருளாளர் கீதா, குழு உறுப்பினர்கள் மாரிமுத்து, ராணி, துரைமுருகன், தீபா, சரண்யா, சத்யா, பாலகிருஷ்ணன், உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக சங்க செயலாளர் சீனிவாசன் வரவேற்றார். தன்னார்வலர் பூபதி நன்றி கூறினார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!