Provision of taxes and drinking water line online: Introduction of Municipal Commissionerate
பெரம்பலூர் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை இனி ஆன்லைன் மூலம் செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து நகராட்சி ஆணையரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, தண்ணீர் வரி,தொழில்வரி ஆகியவை கணிணி வசூல் மையங்கள் மூலம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்கள் வசதிக்காக சனிக்கிழமைகளிலும் வரி கட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இணையதளம் வாயிலாக இருந்த இடத்திலிருந்தே துாத்துக்குடி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை இனி ஆன்லைன் மூலம் செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்கான லிங்க் https://tnurbanepay.tn.gov.in/ இதனை பயன்படுத்தி தங்களது விவரங்களை பதிவு செய்து உரிய முறையில் நகராட்சி வரிகளை செலுத்திடலாம் என பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.