Public Accounts Committee visits Perambalur: Consultation meeting on progress works led by Collector!
பெரம்பலூர் மாவட்டத்திற்கு எதிர்வரும் மார்ச் 8ம் தேதி பொது கணக்கு குழு அதன் தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் வருகை தரவுள்ளதை தொடர்ந்து, அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் கற்பகம் தலைமையில் நடைபெற்றது.
பொது கணக்குழு தலைவர் செல்வபெருந்தகை தலைமையில், நிதி மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி ராஜா, எஸ்.ஆர்.ராஜா, டி.ஆர்.ஜி. அருண்குமார், எஸ்.காந்திராஜன்,கே.கார்த்திகேயன், சி.சரஸ்வதி, எம்.சிந்தனை செல்வன்,எஸ்.சுதர்சனம், வொய்.பிரகாஷ், பூண்டி கே..கலைவாணன்,கே..மரகதம் குமாரவேல், கே.மாரிமுத்து, கே.பி. முனுசாமி, எம்.ராஜமுத்து, ஈ. ராஜா, டி. வேல்முருகன், எம்.ஹெச். ஜவாஹிருல்லா ஆகிய சட்டமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் வருகை தர உள்ளனர்.
இக்குழுவினர், மகளிர் திட்ட செயல்பாடுகள், அதற்கு ஒதுக்கப்பட்ட நிதி, மேற்கொள்ளப்பட்ட பணிகள், நில அளவை, சுகாதாரம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் செயல்பாடுகள், பேரூராட்சி, நெடுஞ்சாலைத் துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகள், பணிகளின் தற்போதைய நிலை போன்ற பல்வேறு துறைகளின் மூலம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் நலத்திட்டங்கள், வளர்ச்சிப் பணிகளின் தற்போதைய நிலை, பணிகள் முன்னேற்றங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளபட உள்ளதை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரகத்தில் கலெக்டர் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
வருவாய், காவல், ஊரக வளர்ச்சி உள்பட அரசுத் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.