Public blockade for 4 hours to protest the opening of a closed mine near Perambalur!

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள வயலப்பாடி – கோவிந்தராஜாபட்டிணம் செல்லும் சாலையில் உள்ள தனியார் சுண்ணாம்புக்கல் சுரங்கம் கடந்த சில ஆண்டுகளாக மூடப்பட்டிருந்தது.

தற்போது, மீண்டும் கடந்த 2 நாட்களாக சுண்ணாம்புக்கல் சுரங்கத்தில் மீண்டும் சுரங்கத்தில் உள்ள தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர். இது தகவலறிந்த கோவிந்தராஜா பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சுண்ணாம்புக்கல் சுரங்கத்திற்கு சென்று தண்ணீரை வெளியேற்றுவதை நேற்று தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சுரங்கத்தில் இருந்து தொடர்ந்து தண்ணீரை வெளியேற்றுவதால் சுற்று வட்டாரத்தில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் நீர் மட்டம் குறைவதோடு, வயலப்பாடி வீரமநல்லூர், காரைப்பாடி, ஓலைப்பாடி, கோவிந்தராஜாபட்டினம் உள்ளிட்ட கிராமங்களுக்கும் குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் தண்ணீரை வெளியேற்ற கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் மீண்டும் இன்று காலை 7 மணி முதல் வயலப்பாடி – வேப்பூர் சாலையில் கோவிந்தராஜா பட்டிணத்தை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு, சுண்ணாம்புக்கல் சுரங்கத்தை மூடக்கோரியும், சுமார் 100 அடி ஆழத்தில் இருந்து தண்ணீரை வெளியேற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவ்வழியாக வந்த அரசு பேருந்தை சிறைப்பிடித்தும், சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த குன்னம் போலீசார், வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களுடன் பேச்சு நடத்தினர். சுமார் 11 மணிக்கு அதிகாரிகள் அளித்து உறுதியின் பேரில் கலைந்து சென்றதுடன், மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் கலைந்து சென்றனர். 4 மணி நேரம் நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!