Public demand for MLAs to bring new police stations in perambalur district
பெரம்பலூர் மாவட்டத்தில் கிடப்பில் உள்ள புதிய காவல் நிலைய திட்டங்களை கொண்டு வர எம்.எல்.ஏக்களுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் மக்கள் தொகைக்கு ஏற்ப காவல் நிலையங்கள் மற்றும் காவலர்கள் இல்லாததால் குற்ற செயல்கள் அதிகரித்து உள்ளது. மேலும், பாதுகாப்பு மற்றும் இதர பணிகளுக்காக போதுமான காவலர்கள் இல்லாததால் காவலர்களின் சேவை பொதுமக்களுக்கு கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் காவல் நிலையத்தை பிரித்து, அம்மாபாளையத்தில் ஒரு காவல் நிலையமும்,
அரும்பாவூரை பிரித்து வேப்பந்தட்டையில் ஒரு காவல் நிலையமும்,
குன்னம் காவல் நிலையத்தை பிரித்து அகரம்சீகூர், வேப்பூர் என இரு காவல் நிலையங்களாகவும்,
மருவத்தூரை பிரித்து கொளக்காநத்தத்தில் ஒரு புதிய காவல் நிலையத்தையும்,
பாடாலூரை பிரித்து செட்டிகுளத்தில் ஒரு காவல் நிலையத்தை அமைக்க ஏற்கனவே கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டு பரிசீலனை செய்யப்பட்டு தற்போது கிடப்பில் உள்ளது.
கிடப்பில் உள்ள புதிய காவல் நிலைய திட்டங்களை கொண்டு வந்து பொதுமக்களுக்கு உதவ வேண்டும் என குன்னம் எம்.எல்.ஏ. ஆர்.டி.ராமச்சந்திரன், பெரம்பலூர் எம்.எல்.ஏக்கள் தமிழ்ச்செல்வன் ஆகியோருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.