Public demand to restore degraded children’s park near Perambalur
கிராமப்புற சிறுவர்களும், உடற்பயிற்சிகள் பெறவும், விளையாடி உற்சாகம் பெறவும் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா பெரம்பலூர் அருகே உள்ள வேப்பந்தட்டை கிராமத்தில் சேதமடைந்து வருகிறது. மேலும், அங்குள்ள உபகரணங்கள் பழுது நீக்கி சரிசெய்யாமல் கிடப்பில் நீண்ட காலமாக கிடப்பதால் அப்பகுதி மக்கள் கால்நடைகளை கட்டி வைத்துள்ளனர். பள்ளிக்கு காலையில் மாலையில் வீடு திரும்பும் சிறார்கள் உற்சாகம் பெற சிறுவர் பூங்காவை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.