Public petition to the Collector to lay down the poultry drugs
நாமக்கல்: கோழி மருந்து குடோனை அப்புற படுத்தகோரி மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து நாமக்கல் ஈ.பி. காலனி பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியத்திடம் கொடுத்துள்ள மனு:
நாமக்கல் பரமத்தி ரோடு இ.பி. காலனியில் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதியில் கோழி மருந்து குடோன் உள்ளது. இப்பகுதியில் பொதுமக்கள் குடியிருக்கு முடியாமல் துர்நாற்றம் வீசுகிறது.
நாமக்கல் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிக்கு தகவல் கொடுத்துள் எவ்வித நடவடிக்கையும் இல்லை. தகவல் அறியும் சட்டத்தில் கேட்டதற்கு இந்த மருந்து குடோன் எவ்விதமான லைசென்ஸ் இல்லாமல் நடத்தப்படுகிறது. இதற்கு தகுந்தாற்போல் மேல்முறையீடு செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.
இந்த மருந்து குடோன் இருப்பதால் எங்கள் பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் உடலுக்கு கேடு விளைவிக்கின்றது. எனவே சம்மந்தப்பட்ட குடோனை எங்கள் பகுதியில் இருந்து அப்புறபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.