Public request to Transport Minister Sivasankar to run bus to Velluvadi village even on Sundays!

பெரம்பலூர் மாவட்டத்தின் கடைகோடி பகுதியான காரியனூர் ஊராட்சி. இதற்கு வெள்ளுவாடி, இந்திரா நகர், சோலைநகர், காந்தி நகர், துணை கிராமங்களாக உள்ளது. அங்கு, விவசாயத்திற்னு அடுத்தபடியாக அப்பளம் தயாரித்தல், மீன்பிடி தொழில் செய்யப்படுகிறது. இந்த கிராமத்திற்கு மாவட்ட தலைநகர் பெரம்பலூரில் இருந்து கை.களத்தூர் வழியாக காலை, மாலை, இரவு என 3 முறை பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதுவும், முறையாக இயக்கப்படுவதில்லை.

வரும் ஆனா வராது என்பது போல், ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகயும், இந்த பேருந்திற்கு விடுமுறை விடப்படுகிறது. இது பல ஆண்டுகளாக தொடர்வதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அதனால், அப்பகுதி மக்கள் 8 கி.மீ தொலைவில் உள்ள கை.களத்தூர் வந்து செல்ல வேண்டும், அல்லது அக்கரையில் உள்ள கடலூர் மாவட்டம், கொரக்கவாடி வழியாக சென்று வர வேண்டிய சூழ்நிலை உள்ளது.

மேலும், இது குறித்து இதிகாரிகளுக்கு மனு கொடுத்தும், உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால், ஞாயிற்றுக் கிழமைகளில் வயதானவர்கள், நோயர்கள், கர்பிணிகள், குழந்தைகள் உரிய மிகச் சிரமப்பட்டு மற்ற ஊர்களுக்கு, சென்று வருகின்றனர். எனவே, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அப்பகுதி மக்களுக்கு தொடர்ந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லை என்றால், அந்த வழித் தடத்தை தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் கொடுத்து விட்டால், நல்ல லாபத்தில் இயக்கி பொதுமக்களுக்கும் நல்ல சேவை வழங்குவார்கள்.

அதே, போல, பெரம்பலூரில் இருந்து வெள்ளுவாடிக்கு இயக்கப்படும் பேருந்தை திருச்சிக்கு இயக்குவதற்கு பதிலாக வி.களத்தூர, பசும்பலூர், வெள்ளுவாடி, காரியனூர், கூகையூர், வழியாக கள்ளக்குறிச்சி சின்னசேலத்திற்கு புதிய வழித் தடத்தில் இயக்கினால், பொதுமக்களும், பயன்பெறுவார்கள், அரசுக்கு வருமானம் இழப்பும் ஏற்படாது. எனவே, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் உடனடியாக பேருந்தை புதிய வழித்தடத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்னர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!