Public request to Transport Minister Sivasankar to run buses on a new route to Namakkal via Chidambaram, Perambalur to Pichavaram, a tourist destination!
பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள பிரச்சி பெற்ற சுற்றுலா தலமான பிச்சாவரத்திற்கும், பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கும், அண்ணாமலை பல்கலை கழகத்திற்கும் பொதுமக்கள், மாணவர்கள் அதிக அளவில் சென்று வருகின்றனர்.
பெரம்பலூரில் இருந்து நேரடி அரசு பேருந்து வசதி இல்லாததால் விருத்தாசலம், அல்லது காட்டு மன்னார்கோவில் வழியாக சென்று பேருந்துகள் மாறி மாறி ஏறி இறங்கி சென்று வருகின்றனர்.
எனவே, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புதிய வழித் தடத்தில், அரியலூர், ஜெயங்கொண்டம், காட்டுமன்னார் கோவில், வழியாகவும், கடலூர், மாவட்டம், வேப்பூர், விருத்தாசலம், சிதம்பரம், பெரம்பலூர், துறையூர், நாமக்கல் வரையிலான புதிய வழித் தடத்தில் பேருந்துகள் இயக்க வேண்டும் என தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கருக்கு போதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த புதிய வழித்தடத்தில் பேருந்துகள் இயக்கப்படுவதால், கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல் மாவட்ட மக்கள் அதிக அளவில் பயன்பெறுவார்கள்.