Public road blockade condemns non-distribution of drinking water for 8 days in the panchayat near Perambalur!
பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வேலூர் கிராமத்தில் கடந்த 8 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் சுமார் அரை மணி நேரம் ஈடுபட்டனர்.
வேலூர் ஊராட்சிக்கு உட்பட்டது கீழக்கணவாய் கிராமம். இந்த கிராமத்தில் கடந்த 8 நாட்களாக குடி தண்ணீர் பைப் லைன்கள் விநியோகம் செய்ய வில்லை. இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் செயலர் மற்றும் கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை கண்டித்து ஒன்று திரண்ட கிராம மக்கள் இன்று காலை பெரம்பலூர் செட்டிகுளம் சாலையில் பஸ் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர் மேலும் ஊராட்சியில் 8 நாட்களாக தண்ணீர் இறைக்கும் மோட்டார் 8 நாட்களாக பழுது நீக்கம் செய்யப்படாமல் அலட்சியமாக உள்ளதை விரைந்து இன்று மாலைக்குள் சரி செய்து சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த ஊராட்சி, முன்னாள் எம்.பி மருதைராஜா, முன்னாள் அமைச்சரும், நீலகிரி எம்.பியுமான ஆ.ராசாவின் சொந்த ஊர் என்பது மட்டுமல்லாமல், ஆ.ராசாவின் அண்ணியார் அம்பிகை சிவசண்முகம் ஊராட்சி மன்றத் தலைவராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .