Puducherry Chief Minister Narayanasamy’s mother dies: DMK leader MK Stalin’s mourning
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியின் தாயார் ஈஸ்வரி அம்மாள் வயது முதிர்வு காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது மறைவெய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமும், துயரமும் அடைந்தேன்.
அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டு, தன்னை ஈன்றெடுத்த தாயாரை இழந்த வேதனையிலிருக்கும் புதுவை முதல்வர் அவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன், என தெரிவித்துள்ளார்.