Quiz for government school pupils, who won the tournament, including a complimentary gift to the county civil service employee

ssa-perambalur பெரம்பலூர் : பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கான வினாடி வினா, பேச்சுப் போட்டி, நூலக செயல்பாடுகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு இன்று மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சிப் பணியாளர் க.நந்தகுமார் ,பரிசு வழங்கி பாராட்டினார்.

பெரம்பலூர் மாவட்ட பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் ஒவ்வொரு மாதமும், பள்ளிகள் அளவில் பேச்சுப் போட்டி, வினாடி வினா போட்டிகள், மன்ற செயல்பாடுகள், நூலக செயல்பாடு மற்றும் குறும்படங்கள் திரையிடப்பட்டு அதன் மூலம் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் கூறும் நிகழ்வு உள்ளிட்டவைகள் நடத்தப்பட்டு, அதிலிருந்து தேர்வாகும் மாணவ மாணவிகளுக்கு ஊராட்சி ஒன்றிய அளவிலும், அதன்பிறகு மாவட்ட அளவிலுமான போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி மாவட்ட அளவில் நடைபெற்ற வினாடி வினா போட்டிகளில் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவிகள் சுபஸ்ரீ, கவிதா ஆகியோர் முதலிடத்தையும், பாளையம் ஆர்.சி. நடுநிலைப் பள்ளி மாணவன் சுரேஷ்குமார், மாணவி வினோதா 2ம் இடத்தையும், திருமாந்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவி ஐஸ்வர்யா, மாணவன் தமிழரசன் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

பேச்சுப் போட்டி ஆங்கில பிரிவில் பெரம்பலூர் தோம்னிக் பெண்கள் மேல் நிலைப்பள்ளியை சேர்ந்த தபித்தால் முதலிடத்தையும், வேப்பந்தட்டை அரசு மேல் நிலைப்பள்ளியை சேர்ந்த செல்வமணி இரண்டாமிடத்தையும், அனுக்கூர் அரசு மேல் நிலைப்பள்ளியை சேர்ந்த லாவண்யா மூன்றாமிடத்தையும் பெற்றனர்.

தமிழ் பேச்சு போட்டியில் செட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி;யை சேர்ந்த சத்தியா முதலிடத்தையும், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை சேர்ந்த சினேகா இரண்டாம் இடத்தையும், சத்திரமணை அரசு உயர் நிலைப் பள்ளியை சேர்ந்த கனிமொழி மூன்றாமிடத்தையும் பெற்றனர்.

நூலக செயல்பாடு பிரிவில் காரை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி சரளா முதல் இடத்தையும், கீழ்மத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி பிரீத்தி 2ம் இடத்தையும், வடக்குமாதவி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவன் சண்முகம் 3ம் இடத்தையும் பிடித்தனர்.

திரைப்பட செயல்பாடு பிரிவில் காடூர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவன் பொன்மணிசெல்வன் முதலிடத்தையும், கூத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவன் சுபா‘; 2ம் இடத்தையும், திருப்பெயர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவி ஐஸ்வர்யா மூன்றாம் இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் அனைவருக்கும் மாவட்ட ஆட்சிப் பணியாளர் .க.நந்தகுமார் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் கூட்ட அரங்கில் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் க.முனுசாமி, மாவட்ட கல்வி அலுவலர் வெங்கடாஜலபதி, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் எலிசபெத், உதவி திட்ட அலுவலர் பாஸ்கர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சரவணன், பாரதிதாசன், கண்ணன் மற்றும் செல்வி ஆகியோர் கலந்துகொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!