R.T. Ramachandran MLA provided loans worth Rs 1 crore and 10 lakh
பெரம்பலூர் மாவட்டம், புதுவேட்டகுடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில், உறுப்பினர்களுக்கு ஒரு கோடியே 10 லட்சம் மதிப்பிலான கடன் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அச்சங்கத்தின் தலைவர் கிருஷ்ணசாமி வரவேற்றார். துணைப் பதிவாளர் த.பாண்டித்துரை முன்னிலை வகித்தார். பெரம்பபலூர் மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஆர்.டி.ராமச்சந்திரன் கலந்து கொண்டு சிறு வணிகக் கடன், தனி நபர்க் கடன், மகளிர் கூய உதவிக் குழு கடன் என மொத்தம் ஒரு கோடியே 10 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கிய அவர் அப்போது அவர் பேசியதாவது:
இந்த சங்கம் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஒரு கோடியே ஏழுலட்சம் இழப்பீட்டில் இருந்தது. தற்போது சங்க நிர்வாக்குழு மற்றும் பணியாளர்களின் அயராத உழைப்பால் சங்கம் லாபத்தில் செயல்படுகிறது. அதற்கு காரணம் இப்பகுதியில் உள்ள சங்க உறுப்பினர்கள் கடன் பெற்று விவசாயத்திற்கு பயன்படுத்தி பின்னர் கடனை திருப்பி செலுத்தியதே இந்த சங்கத்தின் வளர்ச்சிக்கு காரணம். தேசிய வங்கியில் கடன் பெற வேண்டுமானால் சொத்தை அடமானம் வைத்து கடன் பெற வேண்டும். அப்படி விவசாயிகள் சிரமப்படக்கூடாது என்பதற்காக கூட்டுறவு சங்கம் மூலம் கடன் வழங்க தமிழக அரசால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என தெரிவித்தார். வங்கி செயலாளர் நல்லதம்பி, உதவி செயலாளர் அன்பழகன், வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வமணி, பாசறை செயலாளர் இளஞ்செழியன், அதிமுக வழக்கறிஞர் அணி செயலாளர் பாலமுருகன், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் செந்தில்ராஜன் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.