R.T. Ramachandran MLA Rs. 50 thousand financial aid to for Alternative Skills Athlet
இந்திய மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் வருகிற நவம்பர் மாதம் மாற்றுத்திறனாளிகளுக்கான டி. பி .எல் கிரிக்கெட் போட்டி துபாயில் நடக்க உள்ளது. இதில் சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, ராஜஸ்தான் என ஐந்து அணிகள் விளையாட உள்ளன . இதில் தமிழகம் சார்பில் விளையாட உள்ள சென்னை சூப்பர் ஸ்டார் அணிக்கு பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இரும்புலிக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் என்ற வீரர் தேர்வாகியுள்ளார், இவர் துபாய் செல்ல வசதியில்லாததால், குன்னம் எம்.எல்.ஏ ஆர்.டி.ராமச்சந்திரனிடம் கோரிக்கை வைத்தார். அதன் பேரில், தனது சொந்த நிதியிலிருந்து ரூபாய் 50 ஆயிரத்தை, மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர் செந்தில்குமாருக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் செந்துறை தெற்கு ஒன்றிய செயலாளர் உதயம் எஸ். ரமேஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.