Radhika files nomination for Perambalur constituency on behalf of the Puthiya Tamilagam Party!
பெரம்பலூர் தனித் தொகுதிக்கு புதிய தமிழகம் கட்சி சார்பில், களரம்பட்டியை சேர்ந்த ராதிகா என்பவர் தனது கட்சி மாவட்ட தலைவர் பாலாஜியுடன் உள்ளிட்ட ஆதரவாளர்களுடன் வந்து பெரம்பலூர் தேர்தல் நடத்தும் அலுவலர் பத்மஜாவிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
ராதிகா பி.ஏ.பி.எட் பட்டதாரி. இவர் அக்கட்சியில் மாவட்ட மகளிரணிஅமைப்பாளராக உள்ளார். கடந்த 2019ம் ஆண்டில் 6வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.