Rain in various parts of the district of Perambalur
பெரம்பலூர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் இன்றிரவு வெப்பம் தணிந்து திடீர் மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
பெரம்பலூர், எசனை, குன்னம், வேப்பூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளில் இடியுடன் கனமழை பெய்தது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கடும் வெயிலுக்கு பின் இடி மின்னலுடன் கூடிய மழை சுமார் இரண்டு மணி நேரம் பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.