Rain Shower when southwest monsoon blows in Perambalur district!
இந்த ஆண்டு எப்போதும் இல்லாமல் வகையில், தென்மேற்கு பருவக்காற்று பெரம்பலூர் மாவட்டத்தில் வீசும் போது சாரல் மழை தூறலாக பெய்து பூமியையும், உடைகளையும் நனைத்து வருகிறது.
சாலையில் சில்லென காற்று தொடர்ந்து வீசியும், கடந்த 10 நாட்களாக விட்டு பெய்யும் தூறல் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதோடு, வானிலையும் இதமாக உள்ளது.
தென்காசி, தேனி உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளை ஒட்டியே தென்மேற்கு பருவ காற்று வீசும் போது, சாரல் மழை பெய்யும். ஆனால், தற்போது இந்த ஆண்டு புதிதாக கிழக்கு தொடர்ச்சி மலைகளை கொண்டுள்ள பெரம்பலூர் மாவட்டத்திலும் சாரல் மழை தூறலாக பெய்து மக்களை மகிழ்ச்சியுற செய்துள்ளது.
நவம்பர் மாதம் போன்றே ஜுலை மாதமும் இருப்பதால், வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும், வேர்வை மற்றும் வெப்பத்தின் தாக்கம் இல்லாமல் குளிர்ச்சியை அனுபவித்து வருகின்றனர். இது காதலர்களுக்கும், அடுத்த மாதம் ஆடி மாதம் என்பதால், புது மண திருமண தம்பதிகளுக்கும், பெரும் ஆனந்தத்தை அளித்துள்ளது.
சுற்றுப்புறம் குளிர்ச்சியாக உள்ளதால், ஏசியின் பயன்பாடும் குறைந்துள்ளது. இந்த சாரல் மழை மலைப்பிரதேசங்களை நினைவுப்படுத்துகிறது.