Rainy Mobile Medical Camp: Perambalur Collector flags off vehicles!

பெரம்பலூரில், இன்று காலை, நடமாடும் நடமாடும் மழைக்கால மருத்துவ முகாம் வாகனங்களை, பாலக்கரை அருகே மாவட்ட கலெக்டர் வெங்கடபிரியா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

வடகிழக்கு பருவ மழைக்காலங்களில் பரவும் நோய்களை தடுக்கும் வண்ணம் 15 மருத்துவ அலுவலர்கள், 15 செவிலியர்கள், 15 மருந்து ஆளுநர்கள், 4 ஆய்வக வல்லுநர்கள்என அடங்கிய குழுக்கள் உள்ள வாகனங்களை பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த முகாம்களில் 2.5 லட்சம் மதிப்புள்ள மருந்து மாத்திரைகள் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும். இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார். அப்போது, மாவட்ட சுகாதாரப் பணிகள் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார், மாவட்ட ஊராட்சி சேர்மனும், திமுக மாவட்ட செயலாளருமான குன்னம்.சி.ராஜேந்திரன், எம்.எல்.ஏ பிரபாகரன், பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, மாவட்ட மலேரியா அலுவலர் சுப்பிரமணியன், நகராட்சி ஆணையர் குமரிமன்னன், மருத்துவர்கள், செவிலியர்கள், வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்மோகன், திமுக தொண்டர் மதுபாலன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!