“Rajinikanth is the actor who will ban the culture of Balabishegam for lifeless Boards?” Letter of milk agents association.
நடிகர் ரஜினிகாந்திற்கு பால் முகவர்கள் சங்கம் பகிரங்க கடிதம் ஒன்று எழுதி உள்ளது. அதில், “உயிரற்ற கட்அவுட்களுக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்து, பாலினை வீணடிக்கும் கலாச்சாரத்தை தடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இரத்ததானம், உடல் உறுப்பு தானம், கண்தானம் மற்றும் மது, சிகரெட், புகையிலை உள்ளிட்ட போதை வஸ்துகளுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்த “ரசிகர்கள் எனும் மாபெரும் சக்திகளை ஆக்கபூர்வமான செயல்களை செய்திட பணிக்க வேண்டும்” என்பன கோரிக்கைகளை கடந்த 2016ம் ஆண்டு “கபாலி” பட வெளியீட்டிற்கு முன்னரே நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல முயற்சி எடுத்தோம்.
ஆனால் அந்த முயற்சிகள் பலனிக்காத காரணத்தால் தற்போது ஜுன் மாதம் முதல் வாரத்தில் “காலா” படம் வெளியாக இருக்கும் சூழ்நிலையில் கடந்த 29.05.2018 அன்று நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு “பதிவுத் தபால்” வாயிலாக எங்களது சங்கத்தின் கோரிக்கை மனுவை அனுப்பியிருக்கிறோம்.
நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் என்ன செய்யப் போகிறார்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம், என தெரிவித்துள்ளனர்.