Rajini’s own opinion and do not need to criticize TMMK General secretary interview with PriscillaPandiyan

file Copy from FB

துக்ளக் 50 வது ஆண்டு விழாவில் பெரியார் குறித்து ரஜினி பேசியது சர்ச்சையாகி வருகிறது. ரஜினியின் சொந்த கருத்தை பற்றி யாரும் விமர்சிக்க தேவையில்லை என பெரம்பலூரில் தமமுகவின் பொதுச் செயலாளர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் கூட்டரங்கில், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் புதிய நிர்வாகிகள் தேர்வு குறித்து, நேர்காணல் மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமமுவின் பொதுச்செயலாளர் ஜா.பிரிசில்லா பாண்டியன் கலந்து கொண்டு நேர்காணல் செய்து, பேசினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் த.ம.மு.கழகத்தின் செயல்பாடுகள் குறித்தும், புதிய நிர்வாகிகள் தேர்வு குறித்தும் விவாதிக்கப்பட்டது.

கடந்த காலத்திலும், நிகழ்காலத்திலும் அதிமுக மற்றும் தோழமை கட்சிகளுடன் தங்களது கட்சியின் கூட்டணி தொடர்வதாகவும், தேர்தலின் போது எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை பொதுக்குழு கூடி முடிவு செய்யும் என்றார்.

மேலும் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் ஒவ்வொரு அரசியல் வாதிக்கும், தனிமனிதனுக்கும் சுயமாக பேசுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது.

அவர்களுடைய (ரஜினி-கமல்) பேச்சுக்களை சர்ச்சைக்குரிய செய்திகளாய் இருக்கிறது என்றால், சர்ச்சைக்குரிய செய்திகளை ஆக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு செயல்படும் ஒரு கூட்டத்தால் தான் என்றார்.

இதனை விமர்சனம் செய்வதற்கு ஒரு பொருட்டு இல்லை என்று தான் நினைப்பதாகவும், ரஜினி சொல்வது சரி தவறு என்பதற்கல்ல! அவரது சுயமான கருத்துக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய காலகட்டத்தில் இல்லை என்று நினைப்பதாகவும், அவருடைய கருத்துக்களை ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் நம்முடைய செயல்பாடுகள். அதற்கு மாற்றுக் கருத்து இருந்தால் அதனை நாம் வெளிப்படுத்தலாம். அது எந்த விதத்திலும் யாரையும் பாதிக்கும் என்று நாம் சொல்லிவிட முடியாது.

அவர் கூறிய கருத்து முந்தைய கருத்துக்கள். இப்படி நடந்தது என்று தான் கூறியிருக்கிறார். அது தனி மனிதனுடைய கருத்து அதை விமர்சித்து நாம் பேச வேண்டாம் என்று நினைக்கிறேன் என்றார்.

இந்நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் கிளை கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!