Rajiv Gandhi Memorial Day floral tribute on behalf of Congress to mark the Namakkal
ராஜீவ்காந்தி நினைவு நாளை முன்னிட்டு நாமக்கல் மணிக்கூண்டு அருகில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர் ஷேக்நவீத் தலைமையில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
ராஜீவ் காந்தி நினைவு நாளை முன்னிட்டு நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாளை முன்னிட்டு நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மணிக்கூண்டு அருகில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் ஷேக்நவீத் தலைமை வகித்தார். நகர காங்கிரஸ் தலைவர் மோகன் முன்னிலை வகித்தார். இதில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் குமரன், பாண்டியன், வீரப்பன், மாவட்ட துணைத்தலைவர் மாணிக்கம்,வட்டார தலைவர் புதுச்சத்திரம் இளங்கோ, கொல்லிமலை குப்புசாமி, முன்னாள் நகர செயலாளர் லோகநாதன், முன்னாள் நகராட்சி கவுன்சிலர் சோடா ராஜேந்திரன், நகர செயலாளர் தாமு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.