Anti-corruption awareness rally in Perambalur; Launched by the Collector!
பெரம்பலூர் பாலக்கரை பகுதியில், ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் கற்பகம், போலீஸ் எஸ்.பி ச.ஷ்யாம்ளா தேவி முன்னிலையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஆண்டுதோறும் அக்., 31 முதல் நவ., 5ம் தேதி வரை ஊழல் எதிர்ப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஊழலை ஒழிக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் தனலட்சுமி கல்வி நிறுவனங்களை சேர்ந்த சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியில் ஊழலுக்கு எதிராக புகார் கொடுப்போம், லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர், லஞ்சம் கொடுப்பதும் குற்றம் லஞ்சம் வாங்குவதும் குற்றம் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திக் கொண்டு மாணவர்கள் பேரணியில் கலந்து கொண்டனர். இந்த பேரணியானது பாலக்கரை பகுதியில் தொடங்கி தனலட்சுமி மெட்ரிக்குலேசன் பள்ளியில் முடிவுற்றது.
இதில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு டி.எஸ்.பி ஹேமச்சந்திரா உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
விளம்பரம்: